புழுதிப்புயலில் சென்னை சாலைகள்!!!!

நம்மை படாத பாடுபடுத்தி விட்டு சென்றது வட கிழக்குப் பருவமழை.நாள்தோறும் பயமுறுத்தி வந்தது.அந்த புயல்களெல்லாம் ஓய்ந்து விட்டாலும் எப்போதும் ஓயாத புழுதிப்புயல்கள் சென்னை சாலைகளிலே நிலையாக மையம் கொண்டுள்ள்ன.

அதனால் மக்கள் அடையும் துன்பங்களுக்கு அளவே இல்லை.பள்ளம் மெடுமான் சாலைகள்,தார் சாலைகளாய் இல்லாமல் மண் சாலைகளாய் மாறி விட்டதால் எப்போதும் புழுதிக் காற்றையே சுவாசிக்க வேண்டிய சூழலுக்கு சென்னை மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.மேடு பள்ளமான சாலைகளில் மெதுவாகத்தான் பயணிக்க முடிகிறது.அதனால்,சாலைக்ளின் புழுதியும் வாகனங்க்ளின் புகையும் கைகோர்த்து மக்களுக்குக் கண்களில் கண்ணீரை வர வழைத்து விடுகின்றன.

உரியவர்கள் விழிக்க வேண்டும்.அப்படியும் விழிக்க வில்லையென்றால் அவர்கள் உறங்கவில்லை;உறங்குவது போல நடிக்கிறர்கள் என்றே அர்த்தமாகிவிடும்.

Comments

Serendipity said…
ennay un tamizh pulamai. vaazgha tamil, valarga un pugazh. inda chennai roadukey ippadi salichunda, matra nagarangalin saalaigalai patri enna solla. ennum kevalamaga ullana.

Popular posts from this blog

To prioritize or Not to; thats the question

Freedom at Midnight

Malayalam-too tough